Friday, October 5, 2012

உருளைக்கிழங்கு மசாலா

உருளைக்கிழங்கு மசாலா

பூரி செஞ்சா இது ரொம்ப அவசியம் , மசாலா தோசைக்கும் இது தேவை

இது எப்டி செய்யறதுன்னு நாம இப்ப பார்க்கலாம்


தேவை:-

உருளைக்கிழங்கு 1/4 கிலோ
பெரிய  வெங்காயம்   2
பச்சை மிளகாய்           4
எலுமிச்சை                    1/2 மூடி
மஞ்சள் பொடி                சிட்டிகை
உப்பு :                                தேவையான அளவு 
இஞ்சி                                1 துண்டு
கருவேப்பிலை        கொஞ்சம்

தாளிக்க :-

வெதத மிளகாய்: 2
 கடுகு                      1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு    1/2 டீஸ்பூன்


ஸ்டெப்  1:  உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கைகளால்
                       மசித்துக்கொள்ளவும் .

ஸ்டெப்  2:- வெங்காயம் இஞ்சி, பச்சை மிளகாய் துண்டு துண்டாக  நறுக்கி
                        வைத்துக்கொள்ளவும் .

அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் கொஞ்சம் எண்ணை விட்டு , மிளகாய் வத்தல் , கடுகு , உளுத்தம் பருப்பு  தாளித்து , அதனுடன் வெங்காயம் , இஞ்சி , பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு  சேர்த்து வதக்கவும். இதனுடன்
மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக மீண்டும் 5 நிமிடம் வதக்கவும்

இது நல்ல கெட்டியாக  கறி  பதத்தில் வரும் .

சிலருக்கு  சற்று  இளகிய பதத்தில் தேவைப்படும் அதற்க்கு மேலே சொன்ன
வதக்களுடன் கொஞ்சம் கடலைமாவு கரைத்து ஊற்றினால், கிரேவியாக
கிடைக்கும்



 அடுப்பில் இருநது இறக்கியதும் கொஞ்சம்  தேவையான அளவு எலுமிச்சை
சாறு சேர்க்கவும்.

இதனுடன் பட்டாணி , கேரட் சேர்த்தால் சுவை கூடும் .


பூரி என்றதும் முகம் பூரிக்கும் மணக்கும்  மசாலாவை கண்டு இல்லையா   





No comments:

Post a Comment