Thursday, October 4, 2012

யுக்தி

தினசரி தியானம்


முறையாக ஆராயுமிடத்து மெய்ப்பொருளே, எல்லாம் உன்மயம் என்பது வெளியாகும்.

நிறைகோலானது பொருள்களை உள்ளபடி எடை போடுகிறது. யுக்தி அல்லது மெய்ப்பொருள் விசாரணையை முறையாகச் செய்து கொண்டு போனால் அந்த யுக்தியானது மனிதனைத் தெய்வ சன்னிதானத்துக்கு முன் கொண்டு சேர்க்கும். யுக்தியைப் பயன்படுத்துவதும் ஆத்ம சாதனமேயாம்.

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என்னறிவு
செல்லாமல் நன்னெறியிற் சேருநாள் எந்நாளோ?
-தாயுமானவர்

No comments:

Post a Comment