Friday, October 5, 2012

நாலடியார் - (379/400)

நாலடியார்  -  (379/400)

ஊறுசெய்  நெஞ்சந்தம் உள்ளடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழிகேட்டுத் - தேறி
எமரென்று கொள்வாரும் கொள்பவே; யார்க்கும்
தமரல்லர்  தம்உடம்பி னார்.

பொருள்:- ஒளி  பொருந்திய நெற்றியை உடையவரான
விலை மகளிர் பிறருக்கு துன்பம் செய்யும்படியான
தம் உள்ளத்தை மற்றவர் அறிந்து கொள்ளாதபடி
மறைத்துக் கொண்டு, காமுகர் நிச்சயமாக முன்பு
சொல்லிய பசப்பு வார்த்தைகளைக் கேட்டு, நம்பி,
அவளை 'என்னுடய்வள்'   என்று எண்ணிக் கொள்பவர்
அவ்வாறு என்னிக் கொள்ளட்டும்.  அந்த விலை மகளிர்
யாருக்கும் உரியவர் அல்லர். தன் உடலை தனக்கே உரிமையாக
உடையவர் அவர் என்பதே உண்மையாகும்  

No comments:

Post a Comment