Saturday, October 6, 2012

மனிதனின் எதிரி யார் ?

மனிதனின் எதிரி யார் ?




ஆசை நம்மிடம் அடங்கமாட்டேன் என்றாலும், திரும்பத் திரும்ப அடக்கப்
பார்த்துக் கொண்டே தானிருக்க வேண்டும். வைராக்கியம் என்பதான
ஆசயின்மையை, பற்றின்மையை சம்பாதித்துக் கொள்ள விடாமுயற்ச்சி
பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும்.

ஏனென்றால் ஆசை ன்ற இந்த ஒரே சத்ருவை(எதிரி) எப்படியோ ஒரு
தினுசில் எப்பாடு பட்டாவது ஒழித்துக் கட்டி விட்டால் போதும். அப்புறம்
நீங்க ராஜா தான். ராஜா என்றால் இந்த உலகத்து ராஜா  இல்லை.
அவனுக்குள்ள ஆசையும் தொல்லையும் நமக்கு வேண்டவே வண்டாம். ஆசை கிட்டேயே வராத சாஸ்வத சாந்தத்தை உடைய ராஜா.

மணத்தல் எழும் பல நூறாயிரம் கெட்ட விஷயங்களை ஒவ்வொன்றாக் அடக்கப் பார்த்து பிரயோஜனமில்லை அது முடியாத காரியம். ஆகையால் அவை இலைகள் என்றால் அவற்றுக்கு வேறாக உள்ள ஆசை என்ற ஒன்றை வெட்டிவிட்டால் போதும்.  ஆனால், வெளியே நீண்டிருக்கும் கிளையை
வெட்டுவதைவிட, உள்ளே புதைந்துள்ள வேரைத் தேடி அழிப்பது ரொம்பவும் கஷ்டம் தான். இருந்தாலும் இதைச்  செய்யாவிட்டால் வெட்டிய கிளைகள் மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டு தான் இருக்கும் பென்பதால் எப்படியாவது இதை சாதித்துத் தான் ஆகவேண்டும் 

No comments:

Post a Comment