Thursday, October 4, 2012

பச்சை பட்டாணி சூப்

பச்சை பட்டாணி சூப்

உணவுக்கு முன் சூப் அருந்துவது நமக்கு இன்று பெரும்பாலான
உணவகங்கள் மூலம் ஏற்ப்பட்ட பழக்கம். இதை பருகும் போதே
நாம் வீட்டிலேயே இதை செய்து பழகினால் என்ன என்ற ஆசை
தோன்றும் . அது ஒன்றும் அவ்வளவு கடினமானதல்ல
வாங்க சேர்ந்து பழகுவோம் .

இப்பொழுது பட்டாணி சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்


தேவையான பொருட்கள்

பச்சைப் பட்டாணி - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - சிறிதளவு
எலுமிச்சம்பழச் சாறு - 1 மேஜைக் கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
மிளகுத்தூள் - தேவையான அளவு
வெண்ணெய் - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு




வெங்காயம் ,இஞ்சி,  உருளைக்கிழங்கு தோல் சீவி போடி பொடியாக நறுக்கி வைக்கவும் 

வெண்ணை உருக்கி இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி தழை ,உருளைக்கிழங்கு போட்டு நன்றாக வதக்கவும் , இதனுடன் இப்பொழுது 100 கிராம் பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும் . 

3 டம்பளர் தண்ணீர் விட்டு வதக்கிய பொருட்களை தண்ணீரில் போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும் 10 நிமிடம் கழித்த் அடுப்பில் இருந்து இறக்கி , வேகவைத்த நீரை தனியே  ஒரு பாத்திரத்தில் எடுத்து வித்து வெந்த பொருட்களை மசிய அரைக்கவும் 

அரைத்த விழுதை தனியே வைத்துள்ள  நீரில் போட்டு வடிகட்டவும் , இதனுடன் , மிளகுத்தூள் , எலுமிச்சை சாறு சேர்த்து , 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும் 

மீதமுள்ள 50 கிராம் பட்டாணியுடன் உப்பு சேர்த்து குக்கரில் வேகவைத்து , தயாராக உள்ள கரைசலில் சேர்த்து , சூடாக பரிமாறவும் .




இவளவுதாங்க சூப் தயார் , சாப்டுங்க  சுவையா , 


பருகலாம் வாங்க  பச்சை பட்டாணி சூப் 


No comments:

Post a Comment