Tuesday, October 9, 2012

ஆணவ குணத்தை போக்கும் தலம்சிவனின் வீரம் வெளிப்பட்ட அட்டவீரட்ட தளங்கள் -- 3

பாவங்களை போக்கும் திருபறியலூர் வீரட்டானேஸ்வரர்

ஆணவ குணத்தை போக்கும் தலம்

அட்டவீரட்ட தலங்களில்  திருப்பறியலூர் வீரட்டானேஸ்வரர் தலமும் 
ஒன்றாகும். இறைவன் பெயர் வீரட்டானேஸ்வரர், இறைவி 
இளங்க்கொம்பினை. தீர்த்தம் சிவகங்கை சந்திர புஷ்கரணி. திருஞானசம்பந்தர் 
பதிகம் பாடியுள்ளார்.
மனிதனின் ஆணவ குணத்தை போக்கவல்ல திருத்தலம்.  தான் என்ற ஆணவத்துடன் திகழ்ந்த தட்சனை,  பிறைச் சந்த்ரனைச் சடையில் சூடிய 
இறைவன்  அடக்கி அருள்புரிந்த திருத்தலம் பறியலூர். சிவபெருமானின் 
மனைவியான தாட்சாயிணியின் தந்தை தட்சன் மிகச்சிறந்த சிவபக்தன்.

தட்சனின் யாகம்:-

ஒரு முறை  தட்சன் கயிலைமலையை அடைந்த போது, அங்குள்ள 
சிவக்கணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டான். அதனால் பெரும் கோபம் 
அடைந்த தட்சன் பரமசிவனையே வெறுத்து ஒதுக்கினான். அவன் யாகம் 
செய்ய தொடங்கய போது சிவபெருமானுக்கு அழைப்பு அனுப்பவில்லை. 
அவருக்கு அளிக்கப்படவேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையை 
தராமல் யாகம் நடத்தினான்.

ஆணவத்துடன் தட்சன் நடத்தும் யாகத்திற்கு தாட்சாயிணி செல்ல ஈசன் 
அனுமதிக்கைல்லை.  ஆனால் ஈசனின் பேச்சைக் கேட்காமல் சென்ற 
தாட்சாயிணியை தட்சன் அவமரியாதை செய்தார்.  மனமுடைந்த தாட்சாயிணி 
கணவன் சொல் கேளாமல் வந்ததற்காக மனம் வருந்தி யாகத்தீயில் விழுந்து 
தன்னை அழிதுக்க் கொண்டார். 

தனக்கு அவமானம் நேர்ந்த போதும் அதை பொறுத்திருத்த சிவபெருமான் 
சக்திக்கு அவமானம் நேரிட்டதைக் கண்டு கடும் கோபம் கொண்டு வீரபத்திரரை அனுப்பி தட்சன் நடத்தும் யாகத்தை அழித்ததுடன் தட்சன் 
தலையை கொய்து  யாககுண்டத்தில்  தீயிட்டு அவனுக்கு அகந்தை ஒழிய 
ஆட்டுத்தலையோடு திரிந்திட சாபம் கொடுத்தார். தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களையும் சிவபெருமான் தண்டித்தார். அப்போது சூயயனின் பல் உடைந்தது 

இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை 
தினமும் வணங்கி வருக்றார். இத்தலத்தில்  நவகிரகங்களுக்கு தனி சன்னதி 
இல்லை. தட்சன்  தலையை கொய்து அவனை தண்டித்த தலம் திருப்பறியலூர் 
ஆகும். 

ராஜகோபுரம்:-

இக்கோவிலில் மேற்கு நோக்கிய 5 நிலை  ராஜகோபுரம். அதை அடுத்து 3 நிலை உள்  கோபுரம், 50 சென்ட் நிலப்பரப்பளவில் சுயம்பு லிங்கமாக 
வீரட்டானேஸ்வரர் மேற்கு நோக்கியும், அம்மன் இளங் கொடியம்மை தனி 
சன்னதியில் தெற்கு நோக்கியும் உள்ளார்.

உள் பிரகாரத்தில் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன்  ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி,நர்த்தன விநாயகர் ஆகிய மூர்த்தங்கள் உள்ளன.  சண்டேகவரர் சன்னதியும் உள்ளது.  கருவரைச்சுவரில் தட்சன் 
சிவலிங்கத்தை பூஜிக்கும் சிற்பம் உள்ளது. 

எட்டு கரம் கொண்ட வீரபத்திரர் தேர்க் நோக்கி தனி சன்னதியில் காட்சி 
அளிக்கிறார்.  அவர் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடப்பது போல் இவை உள்ளன.  கீழே செப்புத் தகட்டில் தட்சன் யாகம் செய்வது போலவும், பிரம்மன் 
இருப்பது போலவும் சிற்பம் தகட்டால் மூடி  வைத்து உள்ளனர்.

6 முறை அபிஷேகம் 

யாக சம்ஹார மூர்த்திக்கு வருடத்தில் 

தமிழ் வருடப்பிறப்பு 
ஆடிப்பிறப்பு 
ஐப்பசி பிறப்பு 
புரட்டாசி சதுர்த்தி 
தைப்பிறப்பு 
வைகாசி திருவோணம் 

என 6 முறை அபிஷேகம் நடை பெறுகிறது. 

மண்டபத்தில் உற்சவர் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் 
மயில் மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமஸ்கந்தர், விநாயகர் 
ஆகியோர் உள்ளனர். 

அருணகிரிநாதர் இத்தல முருகனை போற்றி பாடியுள்ளார். ஜடாவர்மன், 
சுந்தரபாண்டியன், கோனேரின்மை கொண்டான், விஜய நகர மன்னர்களின் 
கல்வெட்டுகள் உள்ளன.  தாரகன் என்னும் அசுரனால் தேவர்களுக்கு ஏற்ப்பட்ட 
பயத்தை நீக்கிய தலம்.

அமைவிடம்:-

நகை மாட்டம் மயிலாடுதுறையில் இருந்து செம்பனார் கோயில் சென்று 
அங்கிருந்து நல்லாடை செல்லும் வழியில் வலதுபுறமாக சிறிது தூரம் 
சென்று பரசலூர் கைகாட்டி உள்ள இடத்தில் வலதுபுறம் பிரியும் சாலையில் 
இந்த தலம்  சாலை ஓரத்தில் உள்ளது. 

இத்தலத்தில்  அருள்புரிந்து காட்சி தந்து கொண்டு இருக்கின்ற காசி 
விசுவநாதர்  தட்சனுக்கு அருள் வழங்கிய நாயகர்.  காசிக்கு போனால் பாவம் 
போகும் என்பது அம்பிக்க்கை.  கருவறை பெருமானை தரிசித்தால் பாவங்கள் 
அனைத்தும் போகும் என்பது நம்பிக்கை.