Saturday, October 6, 2012

நெல்லிக்காய் பச்சடி - நெல்லி முள்ளி பச்சடி

நெல்லிக்காய் பச்சடி  - நெல்லி முள்ளி பச்சடி


நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது , அனைவரும்
அறிந்ததே.  நெல்லிக்காய் ஊறுகாய் , கண்களே முதலில்
சுவைக்கும் , நாவும் சுவைத்திட துடிக்கும் , இதில் வித விதமாக
செய்து சாப்பிடலாம் , நீர் நெல்லிக்காய், தேன் நெல்லிக்காய் என்று


இப்பொழுது நாம் நெல்லிக்காய் பச்சடி செய்வது எப்படி
என்று அறிந்துகொள்வோம்.




தேவை : பெரிய நெல்லிக்காய் 5

பச்சை மிளகாய் / மிளகாய் வற்றல்  3
தேங்காய் துருவல்  2 டீஸ்பூன்
கொஞ்சம் பெருங்காயம்
உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க: கடுகு , உளுத்தம்பருப்பு , 1 மிளகாய் வற்றல்


நெல்லிக்காய் , பச்சை மிளகாய் வாணலியில் சிறிது எண்ணை
விட்டு வதக்கவும் , நெல்லிக்காய் கொட்டை  நீக்கி , வதக்கிய
பச்சை மிளகாய் சேர்த்து மிகிக்சியில் அரைத்து விழுது எடுக்கவும் .



விழுதை தயிருடன்  சேர்த்து கலக்கவும்

இதில் கடுகு,உளுத்தம்பருப்பு , மிளகாய்வற்றல் தாளிக்கவும்



விருப்பத்திற்க்கேற்ப  கருவேப்பிலை , கொத்தமல்லி சேர்க்கலாம்


இதே தான் காய்ந்த நெல்லி வற்றல்  உபயோகப்படுத்தி செய்யப்படுவது
நெல்லி முள்ளி பச்சடி என்று அழைக்கப்படும்




ஔவையார் வாழ்ந்தால் தமிழ் வளரும் என அதியமான் அரிய நெல்லிக்கனியை அவருக்கு வழங்கியதை

நாம் அனைவரும் அறிவோம் ......அதனை நாமும் உண்டு நம் குலம் தழைக்க செய்வோமா

No comments:

Post a Comment