Saturday, October 6, 2012

சேரன்குளத்தில் காட்சியளித்த ஏழுமலையான்!

சேரன்குளத்தில் காட்சியளித்த ஏழுமலையான்!






திருவோணத்தான் உலகாளுவான்' என்ற பெரியாழ்வாரின் வாக்கிற்கு ஏற்ப, பக்தர்கள் தன்னை வழிபடுவதற்காக பகவான் பல இடங்களில் எழுந்தருளியுள்ளார். அவற்றில் ஒன்றுதான் மன்னார்குடியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சேரன்குளம். இங்கு மூலவராக வெங்கடாசலபதியும், உற்ஸவராக ஸ்ரீநிவாஸரும் அருள்பாலிக்கின்றனர்.
இங்கே திருப்பதியைப் போன்றே புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்ஸவம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் காலையில் பல்லக்கிலும், இரவில் வாகனங்களிலும் பக்தர்களைக் காண வீதியுலா வருகிறார் பெருமாள்.


வயதான மூதாட்டி ஒருவர் தனது பேரனை திருப்பதி அழைத்துச் சென்று ஏழுமலையான தரிசிக்க வைக்க ஆசைப்பட்டார். ஆனால் அதற்குப் பொருள் வசதியில்லை. என்றாலும் ஏழுமலையானின் மீது தீராத பக்தி கொண்ட மூதாட்டி திருப்பதி செல்வதற்காக மடிப்பிச்சை எடுக்க முடிவெடுத்தார். அவ்வாறு மடிப்பிச்சை எடுத்து வரும் வழியில் சேரன்குளம் வெங்கடாசலபதி கோயில் வாசலில் சற்றே கண்ணயர்ந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள், ""இங்கு நானே திருவேங்கடவனாகக் காட்சி தருகிறேன். உன் பேரனின் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்று'' என்று கூறியருளினார்.
தூக்கம் கலைந்த மூதாட்டி கோயிலின் உள்ளே சென்று வெங்கடாசலபதியை தரிசித்தார். அப்போது பகவான் திருப்பதி ஏழுமலையானாகவே காட்சி தர, மூதாட்டி பேரின்பம் அடைந்தார். கண்ணீர் மல்க வெங்கடாசலபதியை வணங்கி பேரனின் பிரார்த்தனையையும் நிறைவேற்றினார். இத்தகைய பெருமை வாய்ந்த சேரன்குளம் வெங்கடாசலபதியை சனிக் கிழமைகளில் அங்கப் பிரதட்சணம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

No comments:

Post a Comment