Wednesday, October 10, 2012

நாலடியார் - (385/400)

நாலடியார்   -  (385/400)


எஞ்ஞான்றும் எங்கணவர்   எந்தோள்மேல் சேர்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ  பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தெழுவார்.

பொருள்:- எந்நாளும் என் கணவர் எம் தோள் மீது அனைத்து,
எம்மைக்கூடி எழுந்தாலும், புதிதாக உறவு கொண்ட அந்த முதல்
நாளிலே யாம் கண்டது போலவே  இன்றும் அவரைக் கண்டதும்
நாணம் கொள்கின்றோம். எம் தன்மை இவ்வாறு இருக்க, பொருள்
விருப்பத்தினால் எப்பொழுதும் பலருடைய மார்புகளையும்
அனைத்து நடக்கின்ற விலை மகளிர், வெட்கம் இன்றி அந்த
பலருக்கும் உரியவராய் இருக்கின்றனரே! இது என்ன பெண்
தன்மையோ.

No comments:

Post a Comment