தினசரி தியானம்
சிருஷ்டி கர்த்தா
உன்னையே எண்ணியிருந்து இறைவா, உன்னை நான் அடைவேனாக.
சிருஷ்டி கர்த்தாவாகிய நான்முகக் கடவுள் இப்பிரபஞ்ச சொரூபமாக இருந்து எண்ணிறந்த புதிய வடிவங்களை எடுத்து வருகிறார். ஆதலால் அந்தந்த உயிர் தன்னைத் தானே புதியதாகச் சிருஷ்டித்துக் கொள்கிறது. மனிதன் தன்னை மேலோனாகச் சிருஷ்டித்துக் கொள்ள முடியும். ஓயாது எண்ணுகிற எண்ணம் அவனை அப்படியமைக்கிறது.
உன்னைநினைந் துன்நிறைவின்
உள்ளே உலாவும் என்னை
அன்னைவயிற் றின்மை
அடைக்காதே பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment