Thursday, October 11, 2012
சேமியா கிச்சடி
சேமியா கிச்சடி
தேவை
சேமியா 200 கிராம்
பெரிய வெங்காயம் 1 (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் )
பச்சை மிளகார 2 (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் )
காரட் 1 (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும் )
மஞ்சள் போடி சிட்டிகை
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க:
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு (துண்டு துண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
கருவேப்பிலை 2 கொத்து
அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு , கடலைப்பருப்பு, கடுகு,
உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி துண்டு போட்டு வதக்கி பின் அதனுடன் , நறுக்கிய வெங்காயம், கரட் போட்டு மேலும் நன்றாக வதக்கவும் , வெங்காயம் பொன்னிறமானதும் , 3 டம்பளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும் தண்ணீர் தளைத்து வந்ததும் அதில் சேமிய போட்டு நன்றாக 5 நிமிடம் கிளறவும்
அவ்வளவுதான் சேமியா கிச்சடி தயார் . சேமியாவிற்கு பதில் ரவை போட்டால்
ரவா கிச்சடி தயார்.
இதனுடன் , காரட்/ பீன்ஸ்/ உருளைக்கிழங்கு என வேறு வேறு காய்கள்
சேர்த்து செய்தால் சுவை கூடும்.
இது சேமியா உப்புமா
Labels:
சிற்றுண்டி வகைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment