Thursday, October 4, 2012

முந்திரி பருப்பு பகோடா

முந்திரி பருப்பு பகோடா


விலை அதிகம், சுவை அதிகம் , இப்டி எல்லாம் சொல்லிண்டே போகலாம்
ஆனால் செய்வது ரொம்ப சுலபம்.


என்ன தேவை

கடலை மாவு 1கப்
அரிசி மாவு      1 கப்
முந்திரி             30        

மிளகாய்த்தூள்    2 டீஸ்பூன்
புதினா இலை கொஞ்சம் (துண்டாக நறுக்கி கொள்ளவும்)
உப்பு தேவைக்கேற்ப (1/2 டீஸ்பூன் )
வெண்ணை/ நெய்    2 டீஸ்பூன்

அவ்ளவுதான் இப்ப இத எப்பிடி செய்யறதுன்னு பாக்கலாம்


கடலைமாவு , அரிசி மாவு , முந்திரி , உப்பு, காரப்பொடி , பொதினா இலை
(துண்டு துண்டாக நறுக்கியது ) எல்லாம் ஒண்ணா  போட்டு  நெய்/வெண்ணை
ஏதாவது ஒன்னு போட்டு நல்லா கலந்து கொஞ்சமா தண்ணிவிட்டு கேட்டியா
பிசைஞ்சு வைங்க

அடுப்பில் மிதமான தீயில் வாணலியில் எண்ணை விட்டு  பிசைந்து
வைத்த மாவில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு  சின்ன சின்னதாக
கிள்ளி , கிள்ளி  போடுங்க , பிள்ளைங்க துள்ளி துள்ளி வரும் பாருங்க
சுவைக்க



கொடுத்து மகிழுங்கள் , பிள்ளைகள் உண்பதைக் கண்டு ரசித்து மகிழுங்கள்




No comments:

Post a Comment