பீட்ரூட் தேங்காய் ஜீரகம் அரைச்சு விட்ட கூட்டு
பீட்ரூட் , காய், சாலட் , அல்வா, ஜூஸ் , இப்டி எவ்ளவோ சாபிடறோம்
இப்ப பீட்ரூட் கூட்டு செஞ்சு சாப்பிடலாம்
தேவை:
பீட்ரூட் 2
பயத்தம்பருப்பு 2 கப்
தேங்காய் துருவல்
உப்பு தேவைக்கேற்ப
ஜிரகம் 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 4
தாளிக்க:- கடுகு , உளுத்தம் பருப்பு, வரமிளகாய்
விழுது அரைக்க:- தேங்காய் துருவல், ஜீரகம், பச்சைமிளகாய் மிக்சியில் போட்டு
விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்
பயத்தம் பருப்பை வறுத்து வேகவைத்துக்கொள்ளவும்
பீட்ரூட் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்
வெந்த பருப்பில் பீட்ரூட் போட்டு , உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும் பிறகு இதனுடன்
அரைத்த விழுதை போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும் .
பிறகு கடுகு உளுத்தம் பருப்பு , வரமிளகாய் தாளிக்கவும் . கருவேப்பிலை சேர்க்கவும்
No comments:
Post a Comment