Wednesday, October 17, 2012

சமம்

தினசரி தியானம்

சமம்
     தேங்கிய நீரில் திங்களின் பிம்பம் தென்படுவது போன்று அமைதியுற்ற உள்ளத்தில் அண்ணலே, உன் திருக்காட்சி தென்படுகிறது.
     தத்தளித்துக் கொண்டிருக்கும் நீரில் மனிதன் தனது பிம்பத்தையோ, ஒரு மரத்தின் பிம்பத்தையோ, சந்திரனது பிம்பத்தையோ சரியாகக் காணமுடியாது. அலைந்து கொண்டிருக்கும் மனத்தில் உண்மை ஒளிர்வதில்லை. சமம் என்பது மனம் அடங்கிய நிலை. ஞானத்துக்கு அது முற்றிலும் அவசியமானது.
ஒன்றைநினைந்து ஒன்றைமறந்து
     ஓடுமனம் எல்லாம்நீ
என்றறிந்தால் எங்கே
     இயங்கும் பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment