Wednesday, October 17, 2012

நாலடியார் - (392/400)



நாலடியார் - (392/400)


தம்மர் காதலை தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துனையில்லார்க்கு - இம்மெனப்
பெய்ய எழிலி குழங்கும் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தனன நீர்த்து.

பொருள்:- தம்மால் விரும்பப்பட்ட காதலருடைய மாலையணிந்த
அழகிய மார்பை, மகிழ்வினால் பூரிக்கும்படியாகத் தழுவுவதற்கு
உரிய வாய்ப்பு இல்லாத மாதர்களுக்கு, 'இம்' என்னும் ஓசையுடன்
மழை பெய்யுமாறு முகில்கள் ஒலிக்கின்ற திசைகளில் எல்லாம். அந்த
ஒலி சாவுப்பறை அடித்தது போன்ற கொடிய தன்மை உடையது ஆகும்.

No comments:

Post a Comment