Monday, October 15, 2012

நாலடியார் - (391/400)

நாலடியார் - (391/400)


முயங்காக்கால், பாயும் பசலை; மற் றூடி
உயங்காக்கால், உப்பின்றாம் காமம்; - வயன்கொதம்
நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தான்சேர்ப்ப!
புல்லாப் புலப்பதோர் ஆறு.




பொருள்:- திகழ்கின்ற கடலானது நிலையாக இல்லாமல்,
அலைகளால் மோதி வருந்துகின்ற நீண்ட கழிகளின்
குளிர்ந்த கரையை உடைய அரசனே! (தலைவனும் தலைவியும்)
தழுவிக் கூடா விட்டால் பிரிவுத் துனப்தால் உடலிலே பசலையானது
மிகுதியாகப் பரவும். ஊடல் கொண்டு வருந்தா விட்டாலோ காம நுகர்ச்சியானது சுவை இல்லாமல் பொய் விடும். ஆகவே, கூடுவதும் ஊடுவதுமாக அமைவதே காம இன்பத்திற்கு ஒப்பற்ற நன்னெறி ஆகும்.

No comments:

Post a Comment