தினசரி தியானம்
பாய்மரம்
பிரபஞ்ச வாழ்வு என்னும் கரைகாணாக் கடலிலே எனக்குக் கப்பல் போன்று இருப்பவர் தாமே.
கடலில் சென்ற கப்பலின் பாய்மரத்தில் பறவையொன்று உட்கார்ந்திருந்தது. ஒரே ஓடத்தில் எவ்வளவு நேரம் இருப்பது என்று எண்ணிய பறவை புறத்தே பறந்து போனது. எங்குச் சென்றும் உட்காரக் கடலில் இடம் கிடைக்கவில்லை. பழையபடி பாய்மரத்துக்கே வந்துவிட்டது. கடவுள் நமக்கு அப்பாய்மரம் போன்றவர்.
ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும் உன்னடிமை
பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே
--தாயுமானவர்
No comments:
Post a Comment