Monday, October 1, 2012

நாலடியார் - (376/400)



நாலடியார் - (376/400)


'பொத்தநூற் கல்லும், புணர்பிரியா அன்றிலும்போல்,
நித்தலும் நம்மைப் பிரியலாம்' என்றுரைத்த
பொற்கொடியும் போர்தக்கார்க்கோடு ஆயினாள்; நன்னெஞ்சே
நிற்றியோ, போதியோ, நீ ?




பொருள்:- நல்ல மனமே! " நூலில் கோர்க்கப்பட்ட உள்துளையை
உடைய மணியைப் போலவும், கூடி இருந்தலின்றும் பிரியாத
அன்றில் பறவைகளைப் போலவும், எப்போதும் உம்மை விட்டுப்
பிரியமாட்டோம்" என்று முன்பு சொன்ன விலைமகள், இப்போது
சண்டை போடும் ஆட்டுக் கிடாவின் கொம்புபோல் குணம்
உடையவளாகி வ விட்டாள். அவள் அவ்வாறு ஆனா பின்னரும்,
நீ அவளிடத்திலேயே ஈடுபட்டு நிர்ப்பாயோ? அல்லது என்னுடன்
வருவாயோ?



No comments:

Post a Comment