Wednesday, October 10, 2012

உருளைக்கிழங்கு (விரல்) சிப்ஸ்

உருளைக்கிழங்கு விரல்  சிப்ஸ் (Potato Finger Chips)


பொதுவா உருளைக்கிழங்கு சிப்ஸ் என்றாலே எல்லாருக்கும்
உமிழ்நீர் சுரக்கும் , இந்த மெது மெதுவான  பிங்கர் சிப்ஸ் என்றால்
கேட்கவே வேண்டாம் .

பெரிய பெரிய  உணவு விடுதிகள் பன்னாட்டு மையங்களில்
இது தயாரித்து கொடுக்கும்போது  விலையும்  அதிகம் கொடுக்க
வேண்டி இருக்கும். ஆனால் நாம் நம் வீட்டிலேயே செய்து
சாப்பிட்டால் சுவையும் அதிகம் , செலவும் குறைவு.


தேவை:-

உருளைக்கிழங்கு 5
உப்பு சிட்டிகை
மிளகுத்தூள்  தேவைக்கேற்ப
எண்ணை  200 கிராம்



உருளைக்கிழங்கை  விரல்கள் போல் நீட்டு நீட்டாய் நறுக்கி
தண்ணீரில் சுத்தமாக கழுவி வைத்துக்கொள்ளவும் . சிறிது
உலரட்டும் ,அல்லது சுத்தமான துணியால் துடைத்து விடவும்




அடுப்பில் வாணலியில் என்னை விட்டு மிதமான சூட்டில்
இந்த உருளைக்கிழங்குகளை பொரித்து எடுக்கவும் .



பொரித்து எடுப்பது அவரவர் விருப்பம் , நன்றாக வறுத்தால்
மொற மொற என்று இருக்கும் , கொஞ்சம் பொன்னிறம் வறுவலில்
எடுத்தால் சிறிது மென்மையாக இருக்கும் .




இதன் மீது மிளகுத்தூள் , உப்புத்தூள் போட்டு , கொஞ்சம்
கெட்சப் விட்டு குடுங்க




என்ன தயார் பண்ணிட்டீங்களா வெளிய எல்லாரும்
காத்திட்டு இருக்காங்க , போங்க சீக்கிரம் கொண்டு போய்
குடுங்க .



விரல் நுனியில் விஷயம் இருக்க , விலை ஏன் அதிகம் கொடுக்கவேண்டும்
செய்து சாப்பிடுங்க  பிங்கர் சிப்ஸ்

No comments:

Post a Comment