தினசரி தியானம்
நல்ல வாய்ப்பு
கருணாகரனே, நான் உன் கையில் கருவியாயிருக்கக் கற்றுக்கொள்வேனாகில் ஒவ்வொரு வேளையும் எனக்கு நல்ல வாய்ப்பே.
செல்வம், செல்வாக்கு, சுதந்திரம் முதலிய வாய்ப்புக்கள் அமைந்தால்தான் அரும்பெரும் செயல்களைச் செய்ய முடியும் என்று எண்ணுபவன் உண்டு. ஆனால் நல்ல வாய்ப்பு என்பது மனிதனுடைய மன நிலையைப் பொறுத்தது. நல்ல மனமுடையவனுக்கு அமைவதெல்லாம் நல்ல வாய்ப்பேயாம்.
ஆருமறி யாமலெனை அந்தரங்க மாகவந்து
சேரும்படி இறைக்குச் செப்பிவா பைங்கிளியே.
-தாயுமானவர்
Arumaiana Vaipu maanidanai pirandhu avan naamam uraika. Aum Namah Shivaya!
ReplyDelete