Monday, October 22, 2012

நாலடியார் - (397/400)

நாலடியார் - (397/400)

ஓலைக் கணக்கர் ஒலியடங்கு புன்செக்கர்
மாலைப் பொழுதில் மணந்தார் பிரிவுள்ளி
மாலை பரிந்திட் டழுதாள் வனமுலைமேல்
கோலஞ்செய் சாந்தந் திமிர்ந்து.


பொருள்:- ஓலையில் எழுதும் கணக்கரின் ஒலி அடங்கும்
(வேலை முடிந்து) அமைதியான செவ்வானத்தை உடையவர்
மாலைப் பொழுதில், தலைவி, தன்னை மணந்தவனின்
பிரிவை நினைத்து, தான் அணிந்திருந்த மாலையை கழற்றி
எரிந்து, தனது அழகான கொங்கைகள் மீது அலங்காரம் செய்து
இருந் சந்தனச் சாந்தையும் உதிர்த்துத் தள்ளி அழுது கொண்டே
இருந்தாள்.

No comments:

Post a Comment