Sunday, October 21, 2012

நாலடியார் - (396/400)


நாலடியார் - (396/400)

அரகாம்பல் நாரும்வாய் அம்மருங்கிரற்க்கு, அன்னோ!
பரற்கானம் ஆற்றின் கொல்லோ -- அரக்கார்ந்தே
பஞ்சிகொண் டுட்டினும், பையெனப் பையென! என்று
அஞ்சிப், பின் வாங்கும் அடி!


பொருள்:- அரக்கு வண்ணமான சிறந்த ஆம்பல் மலரைப்
போன்ற வாயையும், அழகிய இடையையும் கொண்ட என்
மகளுக்கு, முன்பு சிவப்பு நிறம் பொருந்திய குழம்பினைத்
தடவினாலும், 'மெதுவாக! மெதுவாக! என்று அதைப்
போருக்க முடியாது, பயந்து இளைத்து, பின்னால் இழுத்துக்
கொள்ளும் பாதங்கள், இப்போது, ஐயோ, பருக்கை கற்களை
உடைய காட்டை எவ்வாறு கடந்து செல்லப் போகின்றனவோ?

No comments:

Post a Comment