Sunday, October 14, 2012

அழியாப் புகழ் கிடைக்கும்!

அழியாப் புகழ் கிடைக்கும்!





சென்னை - திருவான்மியூரில் உள்ள மருந்தீசுவரர் திருக்கோயிலில் லிங்க உருவத்தின் சிரசில் பசுவின் காலடிக் தழும்பினைக் காணலாம். இதுபோல் வேறு சில தலங்களிலும் இந்த அமைப்பு உண்டு. அவ்வகையில் முக்கியமான ஒரு தலம் கோவையில் உள்ள பேரூர் பட்டீசுவரமுடையார் திருக்கோயில்.

இங்கே சிவ லிங்கத்தின் தலையில், காமதேனு கன்றின் குளம்படித் தழும்பைக் காணலாம். இறைவனின் சந்நிதி விமானத்தில் எட்டு திசை
காவலர்களின் உருவங்கள் உள்ளன. அம்பிகை பச்சைநாயகியின் சந்நிதி விமானம் சதுரமாக அமைந்துள்ளது. மற்றொரு அம்பிகையான மனோன்மணிக்கும் சந்நிதி இருக்கிறது. சோமாஸ்கந்த வடிவில், சிவனுக்கும் அம்மனுக்கும் நடுவில் முருகன் காட்சி தருகிறார்.


முக்தித் தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் இங்கே அருள்புரிகிறார். அம்பாள் சந்நிதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிராகாரத்தில் மரத்தில் உருவான பெரிய ஆஞ்சநேயரும் அருள்கின்றனர். கோயிலின் முன்பு பிறவாப்புளி என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கே போட்டாலும் முளைக்காதாம். இத்தலத்தை தரிசிப்போருக்கு இனி பிறப்பில்லை என்பது ஐதீகம். ஆதிசங்கரர் தன் தாயின் முக்தி வேண்டி இங்கே பிரார்த்தனை செய்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள பனைமரம் இறவாப்பனை எனப் படுகிறது. இங்கே தரிசனம் செய்தால் அழியாப் புகழ் கிடைக்கும் என்பது பொருள்.

No comments:

Post a Comment