Sunday, October 7, 2012

நாலடியார் - ( 382/400)

நாலடியார்  -  ( 382/400)

குடநீர்அட்டு உண்ணும் இடுக்கட் பொழுதும்
கடனீர்  அறவுண்ணும் கேளீர் வரினும்
கடனீர்மை கையாறக் கொள்ளும் மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.

பொருள்:- குடத்தில் உள்ள நீரை மட்டுமே காய்ச்சிப்
பசியாறுவதைத் தவிர வேறு எதுவும் உண்பதற்கு
இல்லாத வறுமைத் துன்பம்  வந்த காலத்திலும்,
கடல் அளவு நீரும்  வற்றிப்போகும் அளவுக்கு உண்டு
விடுகின்ற பெருங் கூட்டமான  உறவினர்கள் வந்தாலும்
தனது கடமையாகிய செயல்களை ஒழுக்கமாகக் கொள்கின்ற
மென்மையான, இன்மொழி பேசுகின்ற பெண்களே இல்லற
வாழ்விற்கு தகுந்த பெருமை உடையவர்கள் ஆவார்கள்.



No comments:

Post a Comment