Friday, October 5, 2012

நாலடியார் - (380/400)

நாலடியார் - (380/400)


உள்ளம் ஒருவன் உழையதா, ஒண்ணுதலார்
கள்ளத்தாற் செய்யும் கருத்தெல்லாம் - தெள்ளி
அறிந்து இடத்தும் அறியாராம் பாவம்
செறிந்த உடம்பி னவர்


பொருள்:- தம் மனம் ஒருவரிடத்தில் இருக்க விசாலமான
நெற்றியை உடைய விலைமகளிர், வஞ்சகமாக அன்புடையவர்
போன்று செய்கின்ற செயல்களை எல்லாம் தெளிவாக ஆராய்ந்து
அறிந்த போதும், தீவினை மிகுதியாக உடைய உடலினை உடைய
பாவிகள், ஒருபோதும் உண்மையை அறிய மாட்டார்கள்.

No comments:

Post a Comment