Friday, October 5, 2012

சிவனின் அட்ட வீரட்ட தலங்கள் - 1

சிவனின் வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்ட தலங்கள்

1. திருமண தோஷம் போக்கும் கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர்





தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கண்டியூர்.
இந்த ஊரில் பழைமை வாய்ந்த வரலாற்று சிறப்பு பெற்ற பாடல் பெற்ற பிரம்மா சிரகண்டீசுவரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் இறைவனாக பிரம்மசிரகண்டீசுவரரும், இறைவியாக மங்கள
நாயகியும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்

தலவரலாறு:- ஒரு  சமயம் பிரம்மா தான் படைத்த ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார், உடனே அந்த பெண் அம்பாளிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டார், அம்பாள் சிவனிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டாள்.

 அம்பாள் சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பின்னர் பிரம்மாவின் ஒரு தலையை தன நகத்தினால் கொய்து கண்டனம் செய்தமையினால் இந்த ஊர் கண்டியூர் என பெயர் பெற்றது.

தன் தவறை உணர்ந்த பிரம்மா, சிவனிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார், சிவனும், பிரம்மனின்  தவறை மன்னித்து அருளினார் பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தலவரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

இத்தலம் அட்ட வீ ரட்ட தலங்களில் முதல் தலமாகவும் சப்தஸ்தான              தலங்களில் 5 வது தலமாகவும் போற்றப் படுகிறது.

பிரதோஷ தலம்: - இங்கு தங்கி இருந்த சதாசபர் என்ற மகரிஷி ஒவ்வொரு
பிரதோஷ நாளிலும் காளஹஸ்தி செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
அவ்வாறு காளஹஸ்தி  செல்ல முடியாவிட்டால் தனது உயிரை விட்டு
விடுவதாகவும் சபதம் செய்தார்.

ஒரு  பிரதோஷம் அன்று மகரிஷியை சோதிக்க சிவன், பெரும் இடியுடன் கூடிய மழையை உண்டாக்கினார். இதனால் மனம் உடைந்த மகரிஷி கோவிலில் அக்னி வளர்த்து, அதனுள் தன் உயிரை மாய்க்க சென்றார்.  உடனே சிவபெருமான் தோன்றி தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன் என்று மகரிஷிக்கு உணர்த்தினார். ஆதலால் இந்த தலம் பிரதோஷ தலமாக விளங்குகிறது.

அறியாமை, மந்தபுத்தி உள்ளவர்கள் பிரதோஷ நாளில் இங்கு சிவலிங்க தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது  பக்தர்களின் நம்மபிக்கையாகும்.

ஞானகுரு :- எல்லா சிவன் கோவில்களில் இருப்பது போல் இத்தலத்தில்
துவாரகர்கள் இல்லை. முருகப்பெருமான் ஞான குருவாக இத்தலத்தில்
வீற்றிருக்கிறார். அர்த்த மண்டப வாயிலுக்கு வடதுபுரத்தில் சப்த ஸ்தான
தலங்களை குறிக்கும் வகையில் 7 லிங்கங்களும் , பஞ்ச பூதங்களை குறிக்கும்
வகையில் 5 லிங்கங்களும் உள்ளன.

பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் வலது கையில் செபமாலையும், இடது கையில் வஜ்ர சக்தியும் கொண்டு காட்சி அளிக்கிறார்.
மயில் வாகனம் இங்கு இல்லை.

நவக்கிரக சன்னதியில் சூரியன், உஷா, பிரத்யூஷாவுடன் வீட்டிருக்கின்ற்றனர்
மற்ற அனைத்துகிரகங்களும் சூரியனை பார்த்த படி உள்ளன. தவறு செய்துவிட்டு  மனம் வருந்துவோர், மன  நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளோர் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

திருமணம் தடைபடுபவர்கள் வாழைக்கன்றில்மஞ்சள் கையிற்றை கட்டி, இங்குள்ள இறைவனை வேண்டினால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தலவிருட்ஷம் வில்வம்.

இத்தலத்தின் சிறப்புகளை பற்றி திருநாவுகரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியர் பாடி உள்ளனர்., இந்த கோவிலில் கி.பி 2-ம நூற்றாண்டில் பல்லவ அரானால் கட்டப்பட்டது. பின்னர் சோழ மன்னர்கள் கோபுரங்களையும், மராட்டியர்கள் தியான மண்டபங்களையும் கட்டினார்கள்,. அகங்காரத்தை அழித்து ஆண்ம உயர்வு பெர கண்டியூர் சிவபெருமானை வழிபட்டு நலம் பெறுவோம்.

சிறப்பு தகவல்கள்:- இத்தலத்தில் இறைவன் மேற்கு நோக்கியும் அம்பாள்   தெற்க்கு நோக்கியும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர் சூரியன்,
சதாபமுனிவர்  ஆகியோர் வழிபட்ட தலம்.

சூரியன் வழிபட்டதால் இத்தலத்தில் உள்ள இறைவன் மீது மாசி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணி முதல்,6.10 மணி வரை சூரிய ஒளி
படுகின்றது.

பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரஸ்வதியும் இங்கு வந்தாள், இதன் அடிப்படையில் இத்தலத்தின் பிரகாரத்தில் சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு
தனி சன்னதி உள்ளது.

தலைஎழுத்து சரியில்லை என மனம் வருத்துவோர் பிரம்மாவிற்கும் கல்வியில் சிறந்து விளங்க  சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து தாமரை மலர் வைத்து வழிபட்டால் கல்வி பாக்கியம் எளிதில் கிட்டும் என்பது ஐதீகம்  .

வழிதடம்:- தஞ்சாவூரில் இருந்து  சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் தஞ்சாவூர் திருவையாவூர் செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ளது கண்டியூர் இத்தலத்திற்கு செல்ல தஞ்சாவூரில் இருந்து அடிக்கடி பஸ்  வசதி உள்ளது.   கும்பகோணம் -  திருவையாறு மார்க்கமாகவும் இத்தலத்திற்கு செல்ல பஸ் வசதி உளது .


இத்தலம் அட்ட வீ ரட்ட தலங்களில் முதல் தலமாகவும் சப்தஸ்தான              தலங்களில் 5 வது தலமாகவும் போற்றப் படுகிறது.



       

No comments:

Post a Comment