தினசரி தியானம்
பூ
உன் திருவடியில் சாத்துவதற்கு நான் தகுதியுடையவன் ஆவேனாக.
படிப்படியாக வளர்ந்து தேவாராதனைக்குத் தகுதியுடையதாகப் பூவானது தன்னை அமைத்துக் கொள்கிறது. மனிதன் நாள்தோறும் தூயவனாகவும் மேலானவனாகவும் தன்னைத் திருத்தியமைத்துக் கொள்ள வேண்டும். நலத்துக்கு நிகரானது நானிலத்தில் வேறு ஏதும் இல்லை.
இணையார் திருவடி என் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனல்தில்லை அம்பலத்தே யாடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.
-மாணிக்கவாசகர்
No comments:
Post a Comment