மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளை உடையது திருவையாறு. தேவாரப் பாடல் பெற்றது. காவிரி வடகரைத் தலங்களில் 51 வது தலம். அப்பர் பெருமான் கயிலைக் காட்சியைக் கண்ட அற்புதப் பதி. இத்திருத்தலத்தில் தருமை ஆதீனத்துக்கு சொந்தமானஸ்ரீதர்ம ஸம்வர்த்தினி உடனாகிய ஸ்ரீபஞ்சநதீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 27.7.2009 அன்று திருப்பணி தொடங்கப்பட்டு நடந்துவருகிறது. ஆகஸ்ட் 20ஆம்
தேதி, காலை 9 மணியளவில் பஞ்சமூர்த்தி விமான பாலாலய ஸ்தாபன வைபவம் நடைபெற்றது . ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைபெற்ற முதல் கால யாக சாலை பூஜை வைபவங்களில் தருமை ஆதீனம் கலந்து சிறப்பித்தார் . திருக்கயிலாய யாத்திரை செல்ல முடியாதவர்கள் திருவையாற்றுக்கு வந்து தரிசித்தால் கயிலாயம் சென்ற பலன் கிடைக்கும் என்று கூறுவர். அவ்வகையில் பக்தர்களுக்கு கயிலாயத்தின் திருப்பணியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அமைவிடம்: தஞ்சைக்கு வடக்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது திருவையாறு.
மேலும் தகவலுக்கு: 94431 50332.
அமைவிடம்: தஞ்சைக்கு வடக்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது திருவையாறு.
மேலும் தகவலுக்கு: 94431 50332.
மயிலை நாதனை கண்டோமே , கயிலை நாதனை காண்போமா

No comments:
Post a Comment