தினசரி தியானம்
அகத்தில் இருப்பது
எங்கும் நீயே நிறைந்திருப்பதால் இறைவா, உன்னை உள்ளே வழுத்தத் தெரிந்துகொண்டால் புறத்தில் உன்னைப் போற்றுவது எளிதாகிறது.
நம் மனதில் இருப்பதைத்தான் நாம்வெளியுலகிலும் காண்கிறோம். மனம் திருந்தியமையுமளவு புறவுலகில் ஒழுங்குப்பாடு இருப்பதைக் காண்போம். மனம் முற்றிலும் நேர்மையடைந்து விட்டால் புறத்திலும் அந்த நேர்மையைக் காண்போம்.
மாசற்ற அன்பர்நெஞ்சே மாறாத பெட்டகமாத்
தேசுற்ற மாமணிநின் தேசினையுங் காண்பேனோ?
-தாயுமானவர்
No comments:
Post a Comment