Saturday, September 15, 2012

இனிப்பு உளுந்து வடை

உளுந்து வடை , இது இனிப்பு உளுந்து வடை


அது எப்டிங்க இருக்கும் , உளுந்து வடை அப்டின்னாலே
அதுல போடும் பச்சை மிளகாய் காரம் அவ்ளோ சூப்பர இருக்கும்
நீங்க குழப்பறீங்களே

சரி சரி வாங்க நீங்களே பாருங்க எப்டி செயறோம்னு அப்புறம்
சொல்லுவீங்க யார் குழம்புவாங்க , குழப்புவாங்க அப்டீன்னு


உளுத்தம் பருப்பு ஆழாக்கு தண்ணீல ஊறவச்சு (1 மணிநேரம்)
கொஞ்சமா தண்ணி விட்டு கெட்டியா அரைச்சு வைங்க , அரைக்கும்
போது  உப்பு , மிளகாய் (1) சேர்த்துக்கோங்க .

இன்னொரு பக்கம் சர்க்கரை பாகு கம்பி பதத்தில் தயார் பண்ணுங்க


அடுப்பில் வாணலியில் எண்ணை  வச்சு சாதாரணமா
எப்டி உளுந்து வடை செய்வீங்களோ அதுபோல செய்ங்க
வடைல கொஞ்சம் எண்ணை  வடிஞ்சதும் அப்டியே சர்க்கரை
பாகில் போட்டு ஊறவையுங்க , ...... அப்புறம் எடுத்து சாப்டுங்க
என்ன சாப்ட்டுடீங்கள ..  எப்டிங்க இருக்கு ,

குலாப்ஜாமுன் மாதிரி இருக்கா ,  பாதீங்கள இப்ப நீங்க என்ன
குழபிட்டீங்க ..




சர்க்கரை பந்தலிட்டு , ஜவ்வாது மேடையிட்டு ..........
சர்க்கரை பாகுவச்சு அதில் உளுந்த வடை போட்டு ....,சாப்பிடுங்க ஜாலியா


No comments:

Post a Comment