Monday, September 3, 2012

அரிசி உப்புமாவும் அடிக்காந்தலும்

அரிசி உப்புமாவும் அடிக்காந்தலும் - By. Savithri Vasan

உப்புமா என்றால் அரிசி உப்புமாதான்  பேஷ் பேஷ்
இத இத இததான் எதிர்பார்த்தேன் என்று
நான் சொல்லலைங்க , எல்லாரும் சொல்லுவாங்க

வாங்க அரிசி உப்புமா எப்டி செய்யறதுன்னு கொஞ்சம்
தெரிஞ்சிக்கலாம் , ரொம்ப சிம்பிள் , வெரி ஈசி  இப்டி
எவ்ளோ கமென்ட் வரும் , எனக்கு தெரியும்

அரிசி , துவரம்பருப்பு , மிளகு , சீரகம்  எல்லாம்
ஒன்னா  போட்டு மிக்சில ஒன்னு ரெண்டா பொடி
செய்துக்குவோம் .

அடுப்பில் வெங்கலப்பானை  (அப்டியா அது என்ன ?)
3 முட்டை எண்ணை , பெருங்காயம்,கடுகு, நீட்டு மிளகாய்
வற்றல், பச்சை மிளகாய்  தேங்காய் துருவல் போட்டு
தாளிக்கவும் . தேவையான தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து
கொதிக்கவிடவும் .


தண்ணீர் தலைக்கட்டும் , நாம சட்னி தயார் பண்ணுவோம்

தண்ணி கொதிக்குது , மிளகாய் குதிக்குது , உடைத்து வைத்த
அரிசி ரவை அதில் சேர்க்கவும். நன்றாக அடிக்கடி கிளறி
விடவும்.

சட்னிக்கு தேங்காய் ரெடி, வெத்த  மிளகாய், உப்பு சேர்த்து
மிக்சியில் ஒரு அரவை. சட்னி தயார் , அதுக்கு கடுகு
உளுத்தம்பருப்பு , மிளகாய்வற்றல் தாளித்து ஓரமா
எடுத்து வச்சிடுங்க .

இப்ப அடுப்புக்கு வருவோம், உப்புமா வாசனை நாசிக்கு
நல்ல சுவை கொடுக்கும். உப்புமா தயார் , இறக்கிடலாம்
அடுப்புலேந்து
அனா அந்த அடிக்கந்தால் வேணுமே என்ன பண்றது.??

கொஞ்சம் அடுப்ப சிம்லா வச்சு , வெங்கலப்பானை  மேல
ஒரு தட்ட போடு மூடி ஜஸ்ட் 5 நிமிஷம் விட்டுடுங்க


( ஜஸ்ட் 2 டீஸ்பூன் தேங்கா எண்ணை  விடுங்களேன்
சுவையை பாருங்களேன்)

சுவையான சூடான அரிசி உப்புமா தயார்




இப்ப அடுப்பை அணைத்துவிட்டு  எல்லாருக்கும்
தட்ட அலம்ப சொல்லி , தண்ணி எடுத்து வச்சு
டிபன் சாப்பிட கூப்டுங்க ........

வந்தாச்சா, தட்ல எல்லாருக்கும் உப்புமா போடுங்க
அனா அந்த அடி காந்தலுக்கு  சண்டை வராம பாத்துக்குங்க

அது அவ்ளோ ருசி , என்ன நான் சொல்லனுமா , உங்களுக்கு
தெரியாதா.  இருங்க நம்ம வீட்டு உப்புமா எப்டி இருக்குன்னு
சாப்ட்டு பார்த்துட்டு சொல்லறேன்.

நீங்களும் மறக்காம எனக்கு சொல்லுங்க




2 comments:

  1. Ennoda ammavin ninaivugalai thoondi vitteergal, avargal saitha arisi uppma appadiya solli irukkireergal. nantri

    ReplyDelete
  2. Very Valuable blog

    Venkat

    ReplyDelete