Monday, September 3, 2012

நாலடியார் -- (348/400)

நாலடியார் -- (348/400)
-----------------------------

கடுக்கெனச்  சொல்வற்றாம் ; கண்ணோட்டம் இன்றாம் ;
இடுக்கண்  பிறர்மாட்டு  உவக்கும்; -- அடுத்தடுத்து 
வேகம் உடைத்தாம்; விறன்மலை நன்னாட!
ஏகுமாம்; எள்ளுமாம்; கீழ்.

பொருள்:- ஆற்றல், பெருமை பொருந்திய மலைகளை உடைய 
நல்ல நாட்டை உடைய மன்னனே! கீழ்மக்கள், கடுமையாகப் 
பேசுவதில் வல்லவர்; கண்ணோட்டம்(இரக்கம் ) இல்லாதவர்;
மற்றவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சி அடைவர்; அடிக்கடி 
கோபம் கொள்வர்; தாம் எண்ணிய, கண்ட, கண்ட இடங்களுக்குச் 
செல்வர்; பிறரை இகழ்வர். இவையெல்லாம் அவரது குணங்கள் 
ஆகும்.  

No comments:

Post a Comment