Monday, September 3, 2012

வெள்ளை கத்தரிக்காய் தேங்காய் பச்சைமிளகாய் கறி

வெள்ளை கத்தரிக்காய்
தேங்காய் பச்சைமிளகாய் கறி By: Savithri Vasan


வெள்ளை கத்தரிக்காய்   7
தேங்காய் துருவல் ஒரு கப்
பச்சை மிளகாய்               5
கொட்டைப்பாக்கு அளவு .... புளி
கடுகு , உளுத்தம்பருப்பு , கடலைப்பருப்பு தாளிக்க

தேங்காய் துருவல் , பச்சை மிளகாய் , புளி
மூன்றும் மிக்சியில் சேர்த்து கெட்டியாக
அரைத்து விழுது தாயார் செய்து கொள்ளவும்

அடுப்பில் வாணலி , மிதமான சூடு
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு
தாளித்து , நறுக்கி வைத்த கத்தரிக்காயை
அதில் போட்டு   , தேவையான உப்பு சேர்த்து
நன்றாக வதக்கவும் .

கத்தரிக்காய் சற்று நிறம் மாறியவுடன்
அரைத்த விழுதை அதில் சேர்த்து நன்றாக
கிளறவும்

இவ்ளவுதாங்க, இத , சாப்ட்டு பாருங்க
இதன் சுவை ,  இதயத்தை தொட்ட சுவை

கொஞ்சம் சூடா சாதம் தட்டில் போட்டு
இந்த காயை விழுதுடன் அதில் போட்டு
ஒரு முட்டை நெய் விட்டு , சாப்டுங்க
சுவையை கூறுங்கள் .

ஆனா வெள்ளை கத்தரிக்காய் தான்
உபயோகப் படுத்தனும் , ஏன் சிகப்பு
கத்தரிக்காய் கூடாதான்னு கேக்காதீங்க


No comments:

Post a Comment