Saturday, September 15, 2012

பயத்தம் பருப்பு பகோட (ப ப ப )

பயத்தம் பருப்பு பகோட  (ப ப ப )

பயத்தம் பருப்பு மிகவும் புரதசத்து நிறைந்தது நாம அத
அடிக்கடி உபயோகப்படுத்தனும் , அதுக்காக நாம
பயத்தம் பருப்பு போட்டு,  கூட்டு , ரசம், வெண்பொங்கல்ல
சர்க்கரைப்பொங்கல்ல கூட செர்க்கறோம், பெசரட் பண்ணறோம்
காலத்துக்கு பருப்பு கூட போட்டுண்டு சாபிடறோம் .

அதுல இப்ப பகோடா செஞ்சு சாப்பிடப்போறோம்

ஆழாக்கு பயத்தம் பருப்பு , 2 பச்சை மிளகாய், 2 ஸ்பூன் தனியா
இஞ்சி ஒரு துண்டு , கொஞ்சம் பெருங்காம் , தேவையான உப்பு
போட்டு மிக்சில  கொர , கொரன்னு  அறைசிடுங்க .

இதுல 2 வெங்காயம் பொடி பொடியா  நறுக்கி போட்டு , கொஞ்சம்
கருவேப்பிலை  கிள்ளி  போட்டு , கெட்டியா    மாவு தயார் பண்ணிடீங்களா



இனிமே என்ன பகோடா செய்யவேண்டியதுதான்

அடுப்புல மிதமான சூட்டில் வாணலியில் எண்ணை வச்சு இந்த மாவ
கொஞ்சம் கொஞ்சமா கைல எடுத்து  கிள்ளி  போடுங்க , நல்லா
வறுபட்டு , பொன்னிறமா வரும்போது எடுத்து ஒரு தட்டுல
போடுங்க .



அடுத்த ஈடு போடறத்துகுள்ள முதல்ல போட்டது காலியச்சா,
யாரு நம்ம வீட்டு குழந்தைங்கதான் சாப்பிட்டு இருக்கும்



"பாசிப்பருப்பு பகோடா , நாக்கில் சுவை , நாசியில் மனம்
ஓசியில் தின்னலாம் ஓடோடி வாங்க , வாங்க"

No comments:

Post a Comment