Saturday, September 15, 2012

கஜமுக சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டியில் செப். 17ல் கஜமுக சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப். 17ல் கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறுகிறது. கடந்த செப். 9ம் தேதியன்று கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது. இரண்டாம் திருநாளிலிருந்து காலை வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு துவங்கியது.இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

நேற்று முன் தினம் கஜமுகசூரசம்ஹாரத்தை முன்னிட்டு கற்பக விநாயகர் யுத்தத்தை துவக்கினார். இரவில் கோயிலை வலம் வருகையில் மூன்று இடங்களில் நின்று மும்முறை சுழன்று யுத்தத்தை துவக்கினார்.

இன்று 3-ம் நாள் காலை 10.30 மணிக்கு கோயில்முன்பாக போரில் சூரனை வதைக்கும் கஜமுகாசுரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.நாளை காலை 6.30 மணிக்கு திருத்தேருக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்படும்.

தொடர்ந்து செப். 17 ம் தேதியன்று மாலை 3.30 மணிக்கு தலையலங்காரம் நடந்து,செப்.18ம் தேதியன்று தேரோட்டம் நடைபெறும்.


கந்தனின் சூரசம்ஹாரம் அறிவோம் , கஜமுகனின் சூரா சம்ஹாரம் அறிவோமா 

No comments:

Post a Comment