Wednesday, September 5, 2012

திருச்செந்தூரில் ஆவணிதிருவிழா

கடலாடும் செந்தூரில் கொடியேற்றம் காண்போம் 




திருச்செந்தூரில் ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 
ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன்
கோலாகலமாக துவங்கியது.

வரும் 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தமிழ்கடவுளாம் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் 
படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 
ஆண்டு முழுவதும் ஏராளமான விழாக்கள் நடைபெற்றுவருகிறது. 
இதில் ஆவணிதிருவிழாவும் ஒன்று. 

இந்தாண்டுக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 
சிம்ம லக்னத்தில் காலை 5 மணிமுதல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. 

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டத்திற்கு 
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானை மீது அமர்ந்து 
வீதி உலா நடந்தது. கொடிபட்டம் ஊர்வலம் உள்மாடவீதிகள் 
வழியாக சன்னதிதெரு வந்து கோயிலை வந்து அடைந்தது. 

1ம் திருநாளான இன்று மாலை 4.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கசப்பரத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி 
செய்கிறார்.

5ம் திருநாளான வரும் 7ம் தேதி இரவு.7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும்,

7ம் திருநாளான வரும் 11ம் தேதி சுவாமி சிவப்புசாத்தி தங்கசப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும்,

8ம் திருநாளான வரும் 12ம் தேதி சுவாமி பச்சை சாத்திவீதி பச்சை மர கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான

10ம் திருநாள் அன்று வரும் 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

கடலாடும் செந்தூரில் கொடியேற்றம் காண்போம் 

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!!!!

No comments:

Post a Comment