Sunday, September 2, 2012

கல் தோசை



தோசைக்கல் தெரியும்

கல் தோசை???

கல்லு மாதிரி கெட்டியா தோசையா ??

யாரோ அந்தப்பக்கம் சொன்னாப்ல கேட்டுதே ?

கல் அளவுக்கு பெரிய தோசை கண்ணாடி மாதிரி , அப்டியே பார்த்தா
முகம் தெரியும் மெலிசா ; ஆமாங்க , அம்மா பண்ணுவா

அந்தக்காலத்தில் !!!!!

இப்ப ??? யாரும் இல்லை !!!

அவ வாத்த தோசை கல் அதுவும் அப்படியே
கல்லாய் சமைந்து போய் நின்றது .....................



ரெண்டு பங்கு அரிசி ,

ஒரு பங்கு உளுந்து

ரெண்டயுமே நல்லா ரொம்ப நைசா அரைக்கணும் ஒண்ணா கொட்டி
கலந்து உப்பு போட்டு மூடி வச்சு , மறுநாள் மதியம் டிபன்



அம்மா குமுட்டி அடுப்பின் முன்னாள் உட்கார்ந்து பெரிய கல்

(என்னால் அந்த கல்லின் அளவை சரியாக சொல்ல முடியவில்லை)

அந்த கல்லின் விளிம்பு வரை பெரிய தோசையாக வார்த்து ஒன்றன்
மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் பாங்கே தனி அழகு.

நிச்சயம் இன்றைய தலைமுறை அந்த தோசையை திருப்பி
போடகூட அவர்களால் முடியாது



ஒரு தோசை செய்து அடுத்த தோசை செய்து அடுக்கும் முன்
முதல் தோசை மேல் கொஞ்சம் தண்ணீர் தெளித்து அடுக்குவாள் ,
தோசைகள் காய்ந்து போகாது .

பெரியகுடும்பத்தில் வாக்கப்பட்ட அம்மா சுமார் 75 முதல் 100
தோசை வரை செய்வா

தொட்டுக்க , நல்லா வக்கனையா

மிளகாய்ப்பொடி,
மிளகாய் பச்சடி
மிளகாய் தொக்கு ,
இது மூன்றும் - அவசியம் இருக்கணும்



அநேகமாக தோசை தீர்ந்துவிடும் இரவே அப்படியே மீந்து போனாலும்,
மறக்காமல் மிளகாய்ப்பொடி , எண்ணை , தண்ணீர் மூன்றும் சேர்ந்த
கலவையை ஒவ்வொரு தோசையாய் ஒத்தி எடுத்து , தட்டு போட்டு
மூடி வைப்பாள்.

மறுநாள் கார்த்தால , மணக்கும் காப்பியுடன் மிளகாய்ப்பொடி
ஊறிய தோசை , சொர்கத்தை காட்டும் என்றால் அது மிகையல்ல ................

"அம்மா நீ எங்கே , என் நினைவுகள் அங்கே"

No comments:

Post a Comment