காஞ்சிவரம் இட்லி:- By:சாவித்திரி வாசன்
இட்லி அரிசி :1.1/2 cup
பச்சை அரிசி 1/2 cup
உளுந்து 1/2 cup
இவை மூன்றையும் ஒன்றாக ஊறவைக்கவும் சுமார் 4---5 மணிநேரம் ஊறியதும் மிக்சியில் கொரகொர என்று அரைத்துக்கொள்ளவும் மாவில் உப்பு சேர்த்து நன்றாக மூடி வைக்கவும் மறுநாள் காலையில் எடுத்து உபயோகப்படுத்தலாம்.
இவை மூன்றையும் ஒன்றாக ஊறவைக்கவும் சுமார் 4---5 மணிநேரம் ஊறியதும் மிக்சியில் கொரகொர என்று அரைத்துக்கொள்ளவும் மாவில் உப்பு சேர்த்து நன்றாக மூடி வைக்கவும் மறுநாள் காலையில் எடுத்து உபயோகப்படுத்தலாம்.
இட்லிக்கு உபயோகப்படுத்தும் முன் மிளகு பொடி செய்து போடவும் , சீரகம் சேர்க்கவும் (மற்றும் நெய் ஒருமுட்டை விருப்பத்தின் பேரில் சேர்க்கலாம் )
இட்லி தட்டில் கொஞ்சம் எண்ணை தடவி அதில் இட்லி செய்வது போலோ அல்லது பெரிய தட்டில் முழு அளவு மாவை ஊற்றி ஆவியில் வைத்து எடுக்கவும் .
இருபது நிமிடம் ஆவியில் வைத்து வெளியே எடுத்து தேவையான அளவுகளில் , பரிமாணங்களில் துண்டுகளாக போட்டு சுவைக்கவும்.(Required shape and size)
இதுக்கு அட்டகாசமா சைடு டிஷ்
ஒரு கொஸ்து செஞ்சு சாப்பிடலாம் .
No comments:
Post a Comment