Saturday, September 8, 2012

மோர் (களி ) கூழ்

மோர் (களி ) கூழ்  By:- Savithri Vasan



கண்டிப்பாக புளித்த மோர் தேவை


அரிசிமாவு      1 கப்
புளித்த மோர் 2 கப்


தாளிக்க

கடுகு
உளுத்தம்பருப்பு
பச்சை மிளகாய்
உப்பு
மோர் (ஊர்கா) மிளகாய்

புளித்த மோரில் அரிசிமாவை போட்டு நன்றாக கெட்டியாக
கரைத்துவைத்துக்கொள்ளவும் உப்பு சேர்த்து .

5 நிமிடங்கள் கழித்து ,

அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணை  விட்டு ,
கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், மோர்மிளகாய்
கருவேப்பிலை போட்டு தாளித்து , அரிசிமாவு மோர் கரைசலை
விட்டு நன்றாக கிளறவும் .

கொஞ்சம் இளகிய பதத்திலேயே இருக்கட்டும் அப்பொழுதுதான்
சுவை கூடும்.



படத்தை பாருங்கள் உங்களுக்கு பதம் புரியும்

மோர்களி  தயார் , களிப்படையுங்கள் , கொண்டாடுங்கள்


"மாமியார் வீட்டுக்கு" தள்ளிகிட்டு போனா மொத்த களி !!!

மாமியார் வீட்டுக்கு மதிப்பா போனா  மோர் களி .......
எது வேணும் சொல்லுங்க




No comments:

Post a Comment