Saturday, September 8, 2012

வறட்டு அரிசி (மாவு) உப்புமா

                      வறட்டு அரிசி (மாவு) உப்புமா    By;- Savithri Vasan



அரிசி மாவு        1 கப்

புளி கரைசல்     2 கப்

காரப்பொடி        2 டீஸ்பூன்
உப்பு                      தேவைக்கேற்ப

தாளிக்க:-

கடுகு , உளுத்தம்பருப்பு


அரிசி மாவை எடுத்துக்கொள்ளுங்கள் , அதில் உப்பு , காரப்பொடி
சேர்த்து , புளி கரைசல் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.




அடுப்பில் நல்ல கனமான இலுப்ப சட்டி வைத்து , கொஞ்சம்
தாராளமாக் எண்ணை விட்டு , கடுகு , உளுத்தம்பருப்பு தாளித்து
பிசைந்த மாவை போட்டு நன்றாக கிளறவும்

உதிர் உதிராக (உசிலி ப்பது போல்) வரும் வரை கிளறவும் .

கை வலித்தால்  கணவர் மனைவியையும் /,மனைவி கணவரையும்
உதவிக்கு அழைத்துக்கொள்ளுங்கள்..

சூடான சுவையான (அரிசி மாவு) உப்புமா தயாரா இருக்கு !!!!





சூடா சாப்டாதான் சுவையா இருக்கும் , ஆறின கஞ்சி
..........பழங்கஞ்சி




No comments:

Post a Comment