Friday, September 7, 2012

உருளைக்கிழங்கு காரக்கறி

உருளைக்கிழங்கு காரக்கறி

அது என்னங்க காரக்கறி , வேற ஏதாவது வெரைடி இதுல இருக்கா ?

அது என்னம்மோ தெரியாதுங்க சொல்லறவங்க எல்லாம் இப்படிதான்
சொல்லி பழக்கம் அதுனால நானும் சொல்லறேன்


உருளைக்கிழங்கு 1/2 கிலோ


முழு உருளைக்கிழங் இதுபோல கட் பண்ணி வேகவைத்து
தோல் உரித்துக்கொள்ளுங்கள் .(கொஞ்சம் மஞ்சள் பொடி
உப்பு சேர்த்து வேகவைக்கவும்)

இப்ப இந்த காய் 2 வகையா செய்யலாம்

1. அப்டியே  வாணலியில் என்னை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு
    தாளித்து , இந்த உருளை கிழங்கை போட்டு 2 ஸ்பூன் காரப்பொடி
    போட்டு  கொஞ்சம் உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க.......
    உருளைக்கிழங்கு  காரக்கறி தயார்.




2. இந்த காரப் பொடிக்கு பதிலா , பொடி இடிச்சு போட்டு  (மிசில அரைச்சு)
     அதாவது கொஞ்சம் தணியா , 4 மிளகாய் வற்றல் மிக்சில போட்டு
     கொஞ்சமா தண்ணி விட்டு விழுதா அரைச்சு எடுத்து காயோடு
    சேர்த்து வதக்குங்க ....... இதுதான் அரைச்சு விட்ட கறி.




மேலே உள்ள ரெண்டு  வகைக்கும் , வித்தியாசம் தெரியறதா

இவ்வளவுதாங்க உருளைக்கிழங்கு கறி , ரெண்டுமே ரொம்ப சூப்பரா
இருக்கும்.

உள்ளம் கவர்ந்த உருளைக்கிழங்கு (அரைச்சுவிட்ட) கறி



No comments:

Post a Comment