Friday, September 7, 2012

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்!



அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்! 




பொள்ளாச்சி அடுத்த கரப்பாடி அமணலிங்கேஸ்வரர் கோவிலில், பிரதிஷ்டை செய்த தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டிக்குட்பட்ட கரப்பாடியில், பழமையான அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இதில், நந்தீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, வனதுர்கை தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோவிலில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.இதையடுத்து, இன்று (7ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. நேற்று மாலை 4.00 மணிக்கு தீர்த்தங்கள், முளைப்பாரி கொண்டு வருதலுடன் விழா துவங்கியது. இன்று காலை 6.30 மணிக்கு கோ பூஜையும், 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், காலை 8.45 மணிக்கு மகா திரவ்வியாஹூதி, காலை 9.00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. காலை 9.15 மணிக்கு தட்சிணாமூர்த்தி, நந்திகேஸ்வரர், வனதுர்கை ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடக்கிறது. காலை 10.00 மணிக்கு மகேஸ்வர பூஜை, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

கும்பாபிஷேகம் காண்பது கோடி புண்ணியம் 

No comments:

Post a Comment