Tuesday, September 25, 2012

அகிலாண்டேஸ்வரியின் ஆசை!

அகிலாண்டேஸ்வரியின் ஆசை!






திருப்பெருமுடி பரமேஸ்வரர் ஆலயம். கி.பி. 969ல் சுந்தர சோழனால் கட்டப்பட்டது. அதன்பின் பொய்சள மன்னன் வீரராமநாதன் காலத்தில் திருப்பணி நடைபெற்றது.

அப்போது விஜயநகர மன்னன் விருப்பண உடையார் கனவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் தோன்றி, "இத்தலத்தில் எனக்கு சந்நிதி அமைப்பாயாக' என்று கூறி மறைந்தாள். விருப்பணனும் அம்மனின் விருப்பத்தை ஏற்று இங்கு அம்மன் சந்நிதி அமைத்தார் என இக
்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன.
அகத்திய மாமுனிவரால் பாடப்பெற்று பூஜிக்கப்பட்ட தலம் என்பதால் இங்குள்ள எம்பெருமானுக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். "உன் அருள்வேண்டி இங்கு வருவோர்க்கு சகல நலமும் கிட்ட வேண்டும்' என அகத்தியர் வேண்டியதால் இங்கு வருபவர்களுக்கு அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார் இறைவன். இங்குள்ள அம்மனுக்கு சிவகாம சுந்தரி என்று பெயர். அகிலாண்டேஸ்வரியின் மறு உருவாய் அன்னை இங்கே காட்சியளிக்கிறாள். இங்கு மகாகணபதி, வெங்கடேசப்பெருமாள், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, சண்டிகேஸ்வரர் போன்ற தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.
சனீஸ்வர பகவானுக்கு சிலாரூபம் தனியாக பிரதிஷ்டை செய்திருப்பதால் சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்குகின்றது. இவரை எள்தீபம் ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் விலக்கி சகல நலன்களையும் கொடுப்பார் என்பது நம்பிக்கை.

திருச்சி மாவட்டத்தில், சோமரசம்பேட்டை என்னும் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment