தினசரி தியானம்
இப்பொழுதே
உன் அருளுக்குப் பாத்திரமாவதற்கு ஏற்ற எதிர்காலத்துக்கு நான் காத்திரேன். ஈண்டு, இப்பொழுதே இறைவா, அதை நான் பெற்றாக வேண்டும்.
நல்லராக எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால் அதன் பொருட்டு அவர்கள் எதிர் காலத்தை நோக்கி நிற்கின்றனர். பசித்திருப்பவன் இப்பொழுதே புசிக்க விரும்புவது போன்று அருளுக்குப் பாத்திரமாவதற்கு இதுவே தருணம். அதைப் பெற முழு மனதுடன் இப்பொழுதே முயலவேண்டும்.
எண்ணிறைந்த மேன்மையடைத்து எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய்க்
கண்ணிறைந்த சோதியைநாங் காணவா நல்லறிவே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment