Monday, September 10, 2012

ஆமை வடை

ஆமை வடை :-By:- Savithri Vasan


பெயர்காரணம் தெரியவில்லை அனால் யூகத்தின்  அடிப்படையில்
ஆமை முதுகு போல் இருபுறமும் உப்பி இருப்பதால் அந்த பெயர்
இருக்கலாம் ..

பெயரா முக்கியம்???

ரெசிப்பி போடறேன் செஞ்சு பாருங்க !!!!


தேவையானவை

துவரம் பருப்பு :    1/2 ஆழாக்கு
கடலைப்பருப்பு  1/2 ஆழாக்கு

பச்சை மிளகாய் ...  4
வெத்த மிளகாய்.....4
பெருங்காயம் ..... சிறிது
உப்பு .......................தேவையானவை

பருப்பை ஒன்றாக போட்டு 1/2  மணி நேரம் ஊறவைக்கவும்

மிக்சியில் , பச்சை மிளகாய், வெத்த மிளகாய் , பெருங்காயம்
உப்பு சேர்த்து நன்றாக அரைத்து பிறகு அதனுடன் பருப்பை
சேர்த்து , கொர , கொரவென்று  அரைக்கவும்



ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை வழித்து வைத்து
கருவேப்பிலை சேர்த்து ,




அடுப்பில்  வாணலியில் எண்ணை  வைத்து
அது காய்ந்ததும் சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு
பொன் நிற கலரில் எடுத்து வைத்து சுவைக்கவும்





"முயலாமை தருமா"  ஆமை  வடை


No comments:

Post a Comment