சீயாளம் செய்முறை – By சாவித்திரி வாசன்
------------------------------------------------------------
இது தாங்க நான் சொன்ன வீக் எண்டு (Week End )ரெசிப்பி
(இது அது தானா, இது மாதிரியா, அது மாதிரியா
அப்டீன்னு கேக்காதீங்க . இது இதுவேதான் எனக்கு
தெரிஞ்ச வரையிலும் இப்ப அவ்ளவா யாரும் செய்யறது இல்ல.)
அதுனால நீங்க செஞ்சு பாருங்க , நான் போனவாரம் எங்க வீட்ல நடந்த நம்ப முகநூல் நண்பர்களுக்கு செஞ்சு அசத்தின டிஷ்.
பயத்தம் பருப்பு 2 ஆழாக்கு

கடலைபருப்பு 1 ஆழாக்கு
துவரம் பருப்பு 1 ஆழாக்கு
பச்சை மிளகாய் 5
காய்ந்த மிளகாய் 5
தனியா பொடி கொஞ்சம்
காரப்பொடி தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
வெங்காயம் பெரியது 4
எலுமிச்சம் பழம் 3
பருப்புகளை ஒன்றாக போட்டு இரண்டு மணிநேரம்
ஊறவைக்கவும்
மிக்சில முதல்ல மிளகாய போட்டு அரைக்கணும்
அப்புறம் பருப்ப போட்டு நல்லா நைசா அரைக்கவும்
அரைத்த மாவை இட்லி குக்கர் / மைக்ரோ ஓவன் வச்சு
ஆவில வேக வைக்கவும் . பிறகு வெளியே எடுத்து வேண்டும்
அளவிற்கு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும் .
வாணலியில் மிதமான சூட்டில் எண்ணை வைத்து கடுகு ,
உளுத்தம்பருப்பு தாளித்து , நறுக்கிய வெங்காயத்தை போட்டு
வதக்கி அதனுடன் துண்டுகளாக வெட்டி வைத்த சீயாளம், தனியா பொடி
காரப்பொடி, உப்பு , போட்டு நன்றாக வதக்கவும்.
துண்டுகள் அதிகமாக இருந்தால் சிறிய அளவில் போட்டு
வதக்கவும் (கொஞ்சம் கொஞ்சமாக செய்வதாக இருந்தால்
வதக்கிய வெங்காயத்தை தனியாக வைத்துக்கொண்டு
ஒவ்வொரு பங்கிற்கும் வதக்கும்போது வெங்காயம் தனியா,
உப்பு , காரப்பொடி சேர்த்துக்கொள்ளவும் )
இவ்வாறு வதக்குவதை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு,
சற்று சூடு ஆறியதும் எலுமிச்சம் பழம் அதன் மேல் பிழிந்து நன்றாக
குலுக்கி விடவும்
இப்பொழுது சீயாளம் தயார் எடுத்து சுட சுட எல்லோருக்கும்
தட்டில் போட்டு குடுக்கவும் (காரம் அதிகம் இருந்தால் சுவை கூடும் )

anna, very nice..wish more and more inputs from you.
ReplyDeleteI tasted சீயாளம் on Friendship day-2012 and the taste is still alive.
ReplyDelete