Friday, September 14, 2012

ரவா பொங்கல்



ரவா பொங்கல் By:- Savithri Vasan

தேவையானவை

ரவா - 2 கப்
பயத்தம் பருப்பு - 1 கப்
பச்சை மிளகாய் - 2
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை

இஞ்சி - ஒரு சிறு துண்டு
முந்திரிப்பருப்பு - 4
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில் கொஞ்சம் நெய்விட்டு ரவாவைப் போட்டு சற்று வறுத்து எடுக்கவும்.
ரவை சூடு பெரும் அளவு வறுத்தால் போதுமானது. அதே போல் பயத்தம் பருப்பையும் போட்டு இலேசாக வறுத்தெடுக்கவும்.

இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பில் 2 கப் நீரைச் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். (குக்கரில் போட்டும் 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கலாம்).

ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதிக்க ஆரம்பித்ததும் அதில் நறுக்கிய இஞ்சி, உப்பு இரண்டையும் சேர்த்து, அடுப்பைத் தணித்துக் கொள்ளவும். ரவாவை மெதுவாக கொதிக்கும் நீரில் போட்டுக் கிளறவும். ரவா வெந்து, கெட்டியானதும், அதில் வேகவைத்துள்ள பருப்பை மசித்துச் சேர்க்கவும். 2 டீஸ்பூன் நெய்யைச் சேர்த்துக் கிளறவும்.

மிளகையும், சீரகத்தையும் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி மீதமுள்ள நெய்யை ஊற்றவும். நெய் சூடானதும் அதில் முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு தாளித்து, இந்த தாளிப்பை ரவா-பருப்பு கலவையில் கொட்டிக் கிளறவும்.


சுவையான ரவா பொங்கல் தயார்.




















No comments:

Post a Comment