Friday, September 14, 2012

சர்க்கரைப் பொங்கல்


சர்க்கரைப் பொங்கல்     By:- Savithri Vasan

பொங்கல் அப்டின்னு  சொன்னா  சர்க்கரை பொங்கல் தான் முதலில் 
நா(ன் ) நினைக்கும் பொங்கல்:



 
தேவையானவை 

அரிசி ...........................1 ஆழாக்கு 
பயத்தம் பருப்பு ..........1/4 ஆழாக்கு
வெல்ல துருவல் .........2 ஆழாக்கு 
(வெல்லம் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும் )

பால் .............................. 1/2 Litter 

முந்திரி ....................... 10 Nos.
திராட்சை.....................10 Nos.
(முந்திரி திராட்சை நெய்யில் வறுத்துக்கொள்ளவும் )

ஏலக்காய் - பொடி செய்து வைத்துக் கொள்ளவும் 

வாணலியில் அரிசி , பயத்தம் பருப்புஒரு உலர்
வறுவல் .

அடுப்பில் கெட்டியான அடி கொண்ட பாத்திரத்தில் 
பால் வைத்து பால் பொங்கி வரும்போது 






வறுத்த அரிசி 
பருப்பு போட்டு நன்றாக பாலில் வேகட்டும் 
அரிசி வெந்த பதத்தில் , பொங்கி வரும்போது 




வெல்லம் கரைத்த நீரை அதில் 



சேர்க்கவும் . நன்றாக அடிக்கடி இடைவிடாமல் கிளறிக்கொண்டே 
இருக்கவும் (அடி பிடிக்க கூடாது) 15 நிமிடம் 





அடுப்பில் இருந்து இறக்கும் முன் நெய் விட்டு நன்றாக 
கிளறவும் (கொஞ்சம் தாராளமா இருங்க) 

இறக்கி வைத்து வறுத்து வைத்துள்ள முந்திரி 
திராட்சை போடுங்க. பொடித்த ஏலக்காய் போடுங்க 

சூடான , சுவையோ சுவை சர்க்கரைப் பொங்கல்




இப்ப ஒரு கப்ல கொஞ்சம் போட்டு சுவைத்து பாருங்க 
வீட்ல இருக்கிற எல்லாரையும் கூப்ட்டு குடுங்க 
பக்கத்து வீட்ல நான் இருக்கேன் என்னையும் கொஞ்சம் 
கவனிச்சுகோங்க .

நான் குடுத்தேன் எங்க பக்கத்து வீட்ல இருக்கற 3 பேருக்கு 
யார் யார்னு பேர் வேணுமா, அதான் உங்களுக்கே தெரியுமே


பொங்கலோ பொங்கல் , சர்க்கரைப்பொங்கல் 

No comments:

Post a Comment