Friday, September 14, 2012

பூசணிக்காய் அவல்

பூசணிக்காய் (தயிர்) அவல்



பூசணிக்காய் பொதுவாக உடலுக்கு நல்லது அதுவும்
நம்முடைய குடல் பாதுகாப்புக்கு மிகவும் சிறந்தது ,
அதனுடன் அவல்  சேர்த்து  மதிய / மாலை நேர சிற்றுண்டி



பூசணி  பத்தை     4 (சாறு எடுத்துக் கொள்ளவும் )
அவல்                      2 கப்
குடமிளகாய்         1 கப் (துண்டாக நறுக்கியது)
பச்சை மிளகாய்  1
உப்பு                        தேவைக்கேற்ப
மிளகு தூள்           1 டீஸ்பூன்
தயிர்                        2 கப்



அவல்  சுத்தப்படுத்தி களைந்து , அதில் பூசணிக்காய் சாறு சேர்த்து
நறுக்கிய குடமிளகாய் , பச்சை மிளகாய், மிளகு பொடி , உப்பு
சேர்த்து தயிர் கலந்து சாப்பிடவும் .  கடும் கோடையில் இது
உடலுக்கு மிகவும் நல்லது

No comments:

Post a Comment