Saturday, September 22, 2012

"வைகுண்ட பரமேஸ்வரி'

அண்ணாநகரில் பரமேஸ்வரி!




சென்னை பராசக்தி, "வைகுண்ட பரமேஸ்வரி' என்ற திருநாமம் கொண்டிருக்கிறாள். குரோம்பேட்டை குமரன் குன்றம் பேருந்து நிறுத்தம் அருகில் அண்ணா நகரில் உள்ள பெரியார் சாலையில் அருள்புரிகிறாள். இந்த நகர் உருவான காலம் தொட்டு வழிபட்டு வரப்படும் ஆலயம் இது. கருவறையில் நாகரின் கீழ் கழுத்தளவுடன் காட்சியளிக்கிறாள் அம்மன். அதற்கு மேல் அமர்ந்த கோலத்தில் கையில் உடுக்குடன் நான்கு திருக்கரங்கள் கொண்டு சுதையினால் ஆன அம்மன் காட்சி தருகிறாள். பிராகாரத்தில் விநாயகப் பெருமான், அர்த்த நாரீஸ்வரர், வள்ளி - தெய்வானையுடன் முருகப் பெருமான், நவகிரங்களுக்கு சந்நிதிகள் அழகுற அமைந்துள்ளன. கோஷ்ட தெய்வமாக வடக்கு திசையை நோக்கி துர்க்கையம்மன் அருள்புரிகிறாள். பிரதான அம்மனை நோக்கி யாளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒரு அம்மன் ஆலயத்திற்கே உரிய அனைத்து முக்கிய விசேஷங்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தற்போது இவ்வாலயத்தில் திருப்பணிகள் நடைபெறுகின்றன. மேலும் தகவலுக்கு 97899 39893.

No comments:

Post a Comment